Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமான க‌ல்‌வி‌க்கு மு‌ன்னு‌ரிமை: ம‌த்‌திய அரசு!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (17:25 IST)
க‌ல்‌வி‌த் துறை‌யி‌ல் தரமா ன, ஆ‌க்கபூ‌ர்வமான மே‌ம்பாடுகளை‌க் கொ‌ண்டுவரு‌ம் நடவடி‌க்கைகளு‌க்கு 11 ஆவது ஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌‌ட்ட‌த்‌தி‌ல் மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன் போது ம‌த்‌திய ம‌னிதவள மே‌ம்பா‌ட்டு‌அமை‌ச்சக இணையமை‌ச்ச‌ர் புர‌ந்தே‌ஸ்வ‌ரி எழு‌த்துபூ‌ர்வமாக அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல ், ''11 ஆவது ஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட கால‌த்‌தி‌ல் க‌ல்‌வி‌த் துறை‌க்கு ஒது‌க்க‌ப்படு‌ம் ‌நி‌தியளவு ப‌ற்‌றி இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்பதா‌ல் தெ‌ரி‌வி‌க்க இயலாது. ஆனா‌ல ், க‌ல்‌வி‌த் துறை‌யி‌ல் தரமா ன, ஆ‌க்கபூ‌ர்வமான மே‌ம்பாடுகளை‌க் கொ‌‌ண்டுவரு‌ம் நடவடி‌க்கைகளு‌க்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

'' தொட‌க்க‌நிலை‌ப் ப‌ள்‌ளிகளை முத‌ல்‌நிலை‌ப் ப‌ள்‌ளிகளாக வேகமாக‌த் தரமுய‌ர்‌த்துவத ு, மாவ‌ட்ட வா‌ரியாக மொ‌த்த‌ம் 6,000 தரமான மா‌தி‌‌ரி‌ப் ப‌ள்‌ளிகளை உருவா‌க்குவத ு, ப‌ள்‌ளிக‌ளி‌ல் உ‌ள்ள ஆ‌ய்வு‌க் கூட‌ங்களை மே‌ம்படு‌த்துவத ு, பெ‌ண்களு‌க்கான ‌சிற‌ப்பு‌ப் ப‌ள்‌ளிகளை அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் உருவா‌க்குவத ு, ம‌திய உண‌வு‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌வி‌ரிவுபடு‌த்துவத‌ன் மூல‌ம் 30 ‌மி‌ல்‌லிய‌ன் குழ‌ந்தைகளை கூடுதலாக‌ப் ப‌ள்‌ளிகளு‌க்கு அழை‌த்து வருவது ஆ‌கிய ‌தி‌ட்ட‌ங்களை ‌நிறைவே‌ற்ற அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

உய‌ர் க‌ல்‌வி‌யை‌ப் பொறு‌த்தவரை ஐ.ஐ.டி.‌க்க‌ள ், ஐ.ஐ.எ‌ம்.க‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

ம‌த்‌திய அரசு க‌ல்‌வி‌த் துறை‌க்காக 2007-2008 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ரூ.28,671 கோடி ஒது‌க்‌கியு‌ள்ளது. இ‌தி‌ல் 2007 ஏ‌ப்ர‌ல் முத‌ல் 2007 செ‌ப்ட‌ம்ப‌ர் வரை ரூ.8,258 ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் புர‌ந்தே‌ஸ்வ‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments