Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ற்கொலைகளை‌த் தடு‌க்கத் தீவிர நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (18:41 IST)
நமது நா‌ட்டி‌ல் மன நல‌ பா‌தி‌ப்‌பினா‌ல் த‌ற்கொலைக‌ள் அ‌திக‌ரி‌ப்பதை‌த் தடு‌க்க ‌‌தீ‌விர நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்துபூ‌ர்வமாக‌ப் ப‌தில‌ளி‌த்த ம‌த்‌திய நலவா‌ழ்வு‌த் துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி ராமதா‌ஸ ், '' தே‌சிய கு‌ற்ற‌ப் ப‌திவு‌க் கழக‌த்‌தி‌ன் தகவ‌ல்படி 2004 ஆ‌ம் ஆ‌ண்டு 1,13,697 பேரு‌ம ், 2005 ஆ‌ம் ஆ‌ண்டு 1,13,914 பேரு‌ம ், 2006 ஆ‌ம் ஆ‌ண்டு 1,18,112 பேரு‌ம் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இ‌தி‌ல் 1 முத‌ல் 2 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ‌தீ‌ர்‌க்கமுடியாத மன நல பா‌தி‌ப்‌பினாலு‌ம ், 5 முத‌ல் 10 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ‌சி‌றிய மனநல‌ப் ‌பிர‌ச்சனைகளாலு‌ம் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர ்'' எ‌ன்றா‌ர்.

இதை‌த் தடு‌க் க, தே‌சிய மன நல‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன்‌கீ‌ழ் பொதுநல மரு‌த்துவ‌த்‌தி‌ன் ‌ஒரு பகு‌தியாக மன நல‌ச் சேவைகளையு‌ம் அ‌ளி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இ‌வ‌ற்றை மா‌நில அரசுக‌ள் மூலமாக‌ச் செய‌ல்படு‌த்த மாவ‌ட்ட மன நல‌த் ‌தி‌ட்ட‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மன நல மரு‌த்துவமனைக‌ளி‌ல் கூடுத‌ல் வச‌திகளை‌ச் செ‌ய்து தருத‌ல ், மாவ‌ட்ட மரு‌த்துவமனைகளை ந‌வீன‌ப்படு‌த்‌தி மே‌ம்படு‌த்துத‌ல் உ‌ள்‌ளி‌ட்ட நடவடி‌க்கைக‌ள் மன நல‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் எடு‌க்க‌ப்படு‌ம்.

இதுத‌வி ர, த‌ற்கொலை தடு‌‌ப்பு ‌தி‌ட்ட‌ம ், மன அழு‌த்த ‌‌சி‌கி‌ச்சை ‌தி‌ட்ட‌ம ், ப‌ள்‌ளிக‌ளி‌ல் மனஅழு‌த்த ஆலோசனை மைய‌ங்க‌ள் அமை‌ப்பது உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்று‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments