Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாளாவது நாடாளுமன்றம் கூட வேண்டும் : குருதாஸ் தாஸ் குப்தா!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:40 IST)
பெருமைமிக்க ஜனநாயக நாடான இந்தியாவின் உயர்ந்த அதிகார அமைப்பான நாடாளுமன்றம் ஆண்டுக்கு 100 நாளாவது கூட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா வலியுறுத்தினார்.

மக்களவையில் இன்று பேசிய குருதாஸ் தாஸ் குப்த ா, '' நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அதன் மாண்புக்குப் பொறுத்தமற்ற வகையில் சென்று கொண்டுள்ளன. அவைத் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டவாறு ஆண்டுக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூட வேண்டும ்'' என்று கவலையுடன் கூறினார்.

'' ஆட்சியில் உள்ள கட்சிக்கு நாடாளுமன்றம் இயங்குவது தொந்தரவாக உள்ளதென்று நினைக்கிறேன். இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் கூட 11 நாட்கள்தான் ஒழுங்காக நடக்கவுள்ளது. மற்ற நாட்கள் மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதிலும ், அமளியால் தள்ளி வைப்பதிலும் சென்றுவிட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான நாட்கள் நாடாளுமன்றம் கூடுவது இதுவே முதல் முறையாகும ்'' என்றும் அவர் கூறினார்.

அப்போது இடைமறித்த ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத ், கேள்வி நேரத்திற்குப் பிறகும் கேள்வியெழுப்புவது யார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி எழுந்த ு, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் பொறுத்தமற்ற வகையில் செல்கின்றன என்ற கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இவ்வளவு குறைவான நாட்கள் கூடுவது கடந்த 9 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் தாஸ்முன்ஷ ி, குளிர்காலக் கூட்டத் தொடர் 5 நாட்கள் கூட நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இறுதியில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி குறுக்கிட்ட ு, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments