Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (19:59 IST)
கடந்த 21 ஆம் தேதிவரை மரண தண்டனை பெற்ற 28 கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில ், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். கோவிந்தசாம ி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஸ ், ரவீந்தர ், சுரேஷ ், பிரகாஷ ், ஷெ ராம ், ஷியாம் மனோகர் ஆகியோரின் கருணை மனுக்கள் 1998 ஆம் ஆண்டிலும ், நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான முகமது அப்சலின் கருணை மனு 2006 ஆம் ஆண்டிலும ், ஹரியானாவைச் சேர்ந்த சோனிய ா, சஞ்சீவ் ஆகியோரின் கருணை மனுக்கள் இந்த ஆண்டும் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நமது நாட்டின் பல்வேறு சிறைகளில் மொத்தம் 3,45,648 பேர் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments