Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை துறைமுக‌த்‌தி‌ல் பு‌திய சர‌க்கு பெ‌ட்டக முனைய‌ம்: டி.ஆ‌ர்.பாலு தகவ‌ல்!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (16:27 IST)
மும்பை துறைமுகத்தில் ரூ.1228 கோடி மதிப்பீட்டில் பு‌திதாக சரக்கு பெட்டக முனையம் அமைக்கவும ், தற்போதுள்ள சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எ‌ன்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

'' இத்திட்டம் முழுவதும் உருவாக்கி இயக்கி ஒப்படைக்கும் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மொ‌த்த ம‌தி‌ப்‌பீடான ரூ.1228 கோடி‌யி‌ல், இத்திட்டத்தை மேற்கொள்ளும் த‌னியா‌ர் நிறுவனம் ரூ.862 கோடியையும் மீதமுள்ள தொகையை மும்பை துறைமுகமும் முதலீடு செய்யும்.

கடலுக்குள் அமைக்கப்படும் இரண்டு கப்பல் துறைகள், உள்ளே வருவதற்கான வழி உ‌ள்‌ளி‌ட்ட வசதிகளை தனியார் நிறுவனம் உருவா‌க்கு‌ம். கடலுக்குள் 14.5 மீட்டர் நீளமுள்ள கப்பல்கள் வருவதற்கான வழி, க‌ப்ப‌ல் திரும்புவதற்கான வட்டப்பாதை அமைத்தல், இதர பணிகளை மும்பை துறைமுகம் உருவா‌க்கு‌ம்

மும்பையில் கப்பல் போக்குவரத்து தேவைகளை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும். இதனா‌ல் 96 லட்சம் டன் சரக்குகளை கூடுதலாக கையாள முடியு‌ம்'' என்று அமை‌ச்ச‌ர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments