Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகம் : நனவாகு‌ம் பா.ஐ.க-‌‌வி‌ன் ‌நீ‌ண்டநா‌ள் கனவு!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (15:31 IST)
தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌ட்‌சி அமை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற பா.ஐ.க.-‌வி‌ன் ‌நீ‌ண்ட நா‌ள் கனவு, ம‌த்‌திய அமை‌‌ச்சரவை நே‌ற்று அ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் அம‌லி‌ல் உ‌ள்ள குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சியை‌‌‌ நீ‌க்க முடிவு செ‌ய்த‌ள்ளதை அடு‌த்து நனவாகு‌ம் ‌நிலை உருவா‌கியு‌ள்ளது.

இதனை‌த் தொட‌ர்‌ந்து கட‌ந்த ஒரு மாத காலமாக அ‌ங்கு ‌நில‌வி வ‌ந்த அர‌சிய‌ல் நெரு‌க்கடி முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளது.

கா‌வி‌க் க‌ட்‌சி ஏ‌ற்கனவே மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌த்துட‌ன் செ‌ய்து‌க் கொ‌ண்ட ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் படி த‌ற்போது முத‌ல் அமை‌ச்ச‌ர் பத‌வியை கை‌ப்ப‌ற்று‌கிறது.

மத‌ச்சா‌ர்ப‌ற்றசனதா தள‌த்து‌க்கு‌ம ், பா.ஐ.க-வு‌க்கு‌ம் இடையை உருவான ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் படி முத‌ல் 20 மாத‌ங்‌க‌ள் மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதா தளமு‌ம், அடு‌த்த 20 மாத‌ங்க‌ள் பா.ஐ.க.-வு‌ம ் ஆ‌ட்‌சியை நட‌த்துவது எ‌ன்று முடிவு செ‌ய்‌திரு‌ந்தன.

இ‌ந்‌நிலை‌யி‌ல் பா.ஐ.க-‌விட‌ம் ஆ‌ட்‌சியை ஒ‌ப்படை‌க்க அ‌ப்போதைய முத‌ல்வ‌ர் குமாரசா‌மி மறு‌த்ததை‌த் தோட‌ர்‌ந்து கட‌ந்த மாத‌ம் அ‌ங்கு அர‌சிய‌ல் ‌நிலை மோசமானது. ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் குமாரசா‌மி தா‌ன் எடு‌த்‌திரு‌ந்த ‌நிலை‌க்கு தலை‌கீழான ‌நிலையை மே‌ற்கொ‌ண்டு பா.ஐ.க-வு‌க்கு ஆதரவு அ‌ளி‌க்க மு‌ன்வ‌ந்தா‌ர்.

பா.ஐ.க-‌வி‌ன் 24 ஆ‌ண்டு கால ‌நீ‌ண்ட நெடு‌ம் பயண‌த்‌தி‌ற்‌க்கு‌ப் ‌‌பி‌ன்ன‌ர் நா‌ட்டி‌ன் தெ‌ன்பகு‌தி‌யி‌ல் ஒரு ஆ‌ட்‌சியை வ‌‌‌‌ழிநட‌த்‌தி‌ச் செ‌ல்லு‌ம் வா‌ய்‌ப்பு ‌கி‌ட்டியு‌ள்ளது. கட‌ந்த 1983-‌ம் ஆ‌ண்டி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் அ‌ல்லாத ஆ‌ட்‌சி க‌ர்நாடகா மா‌‌நில‌த்‌தி‌ல் ராம‌கிரு‌‌‌‌‌‌‌ஷ் ண ஹெ‌க்டே தலைமை‌யி‌ல் அமை‌ந்த போது ஆ‌ட்‌சி‌க்கு ஆதரவு த‌ந்து அ‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் பா.ஐ.க இணை‌ந்தது,

224 உறு‌ப்‌பின‌ர்களை‌க் கொ‌ண்ட க‌ர்நாடக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் 18 உறு‌ப்‌பின‌ர்களையே பெ‌ற்‌றிரு‌ந்த பா.ஐ.க அ‌ப்போது கா‌ங்‌கிரசு அ‌ல்லாத ஜனதா க‌ட்‌சி ஆ‌ட்‌சியை அம‌ர்‌த்துவ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்‌றியது. க‌ர்நாடக‌த்‌தி‌ல் அ‌ந்த தே‌ர்த‌லி‌ன் போது தா‌ன் ம‌க்க‌ள் யாரு‌ம் த‌னி‌த்து ஆ‌ட்‌சி அமை‌க்க இயலாத ஒரு ‌தீ‌ர்‌ப்பை முத‌ன் முதலாக வழ‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர்.

கட‌ந்த 1983 தொட‌ங்‌கி 2004-‌ல் க‌ர்நாடக ச‌ட்ட‌ப் பேரவை‌க்கு நடை‌ப் பெ‌ற்ற தே‌ர்த‌லி‌ல் 79 இட‌ங்களை‌ப் பெ‌ற்று த‌னி‌ப்பெரு‌ங் க‌ட்‌சியாக உருவெடு‌த்த ‌நிலை‌யிலு‌ம் பா.ஐ.க-‌வி‌ன் ஆ‌ட்‌சி‌க் கனவு , கனவாகவே போனத‌ற்குகு காரண‌ம், ம‌க்க‌ள் இ‌ந்த தே‌ர்த‌லிலு‌ம் த‌ங்க‌ள் ‌தீ‌ர்‌ப்பை தெ‌ளிவாக வழ‌ங்காம‌ல் 3 க‌ட்‌சிகளு‌க்குமாக வழ‌ங்‌கியது தா‌ன்.

ஆ‌ட்‌சியமை‌க்க பா.ஐ.க ஆதரவு த‌ந்த ‌நிலை‌யி‌ல், தனது மத‌ச்சா‌ர்ப‌ற்ற த‌ன்மையை ‌வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக அத‌ன் ஆதரவை நிராகரித்து‌வி‌ட்டு முத‌ன்முதலாக தர‌ம்‌சி‌ங் தலைமை‌யிலான கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌‌ணி அர‌சி‌ல் ப‌ங்கே‌ற்று 20 மாத‌ங்க‌ள் ஆட்சியில் பங்கேற்றப் ‌பி‌ன்ன‌ர் கட‌ந்த ஆ‌ண்டு கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌சியை‌க் க‌வி‌ழ்‌த்தது மத‌ச் சா‌ர்ப‌ற்ற ஜனதாதள‌ம்.

இதனை‌‌த் தொட‌ர்‌ந்து பா.ஐ.க-வுட‌ன் கூ‌ட்ட‌ணி அமை‌த்து‌க் கொ‌ண்டு 2-வது முறையாக கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி அமை‌த்து 20 மாத‌ங்க‌ள் ஆ‌ட்‌சி நட‌த்‌தினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments