Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுத் தேவையை ‌‌நிறைவுசெ‌ய்ய ந‌தி‌‌‌கள் இணை‌ப்பு அவ‌சிய‌ம்: சைஃபு‌தீ‌ன் சோ‌ஸ்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (16:55 IST)
எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் உணவு தா‌னி‌ய‌த் தேவையை ‌நிறைவு செ‌ய்யத் தேவைப்படும் பாசன வசதியை பெருக்க வேண்டுமெனில் நமது நாட்டின் ந‌திகளை இணை‌ப்பது அவ‌சிய‌ம் எ‌ன்று ம‌த்‌திய ‌நீ‌ர்வள‌த்துறை அமை‌ச்ச‌ர் ச ை ஃபு‌தீ‌ன் சோ‌ஸ் கூறியு‌ள்ளா‌ர ்.

புதுவை‌யி‌ல் நடைபெ‌ற்ற தே‌சிய ந‌தி‌நீ‌ர் மாநா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்று‌ப் பே‌சிய அவ‌‌ர ், ‌ தீ‌‌விரமாக முய‌ற்‌சி செ‌ய்தா‌ல் ந‌திக‌ள் இணை‌ப்பு ‌நிறைவேறு‌ம். ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி இ‌த்‌தி‌ட்ட‌ம் ‌நிறைவே‌றினா‌ல் ஒருநா‌ள் உலக‌த்‌தி‌ற்கே எடு‌த்து‌க்கா‌ட்டாக அது ‌விள‌ங்கு‌ம் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல ், மா‌நில‌த்‌தி‌ற்கு மா‌‌நில‌ம் ‌நீராதார‌ங்க‌ள் மாறு‌கி‌‌ன்ற ன, மழை பெ‌ய்யு‌ம் அளவு மாறுபடு‌கிறத ு. எனவே அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் ‌நீ‌‌ர்‌பிடி‌ப்பு‌க் க‌ட்டமை‌ப்புகளை உருவா‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம ்.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் உணவு‌த் தேவை அ‌திக‌ரி‌க்கு‌ம ். 2050- ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் நமது நாட்டின் உணவுதா‌னிய‌த் தேவை 450 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன்னாக இரு‌க்கு‌ம ்,

நமது நா‌ட்டி‌‌ல் எ‌ல்லா வகை‌யிலு‌ம் சே‌ர்‌த்து 140 ‌மி‌ல்‌லிய‌ன் ஹெ‌க்டே‌ர் ‌விளை‌நில‌ங்க‌ள் உ‌ள்ள ன. இதை 160 ‌மி‌ல்‌லிய‌ன் ஹெ‌க்டேராக அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வளவு ‌நில‌த்‌தி‌ற்கு‌ம் ‌நீ‌ர்‌ப்பாசன வச‌திகளை‌ச் செ‌ய்துதர இ‌ப்போதிரு‌க்கு‌ம் ‌நீராதார‌ங்க‌ள் போதாத ு. ந‌தி‌நீ‌ர் இணை‌ப்பே இத‌ற்கு ‌‌தீ‌ர்வாக அமையு‌ம ்.

இதுத‌விர நமது பழ‌ங்கால ‌நீ‌ர் சே‌மி‌ப்பு முறையான மழை ‌நீ‌ர் சே‌மி‌ப்பை ஊ‌க்கு‌வி‌க்க வே‌ண்டு‌ம ். பு‌திய ‌நீ‌‌ர் சே‌மி‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌ங்களை நமது பொ‌றியாள‌ர்க‌ள் உருவா‌க்க வே‌ண்டு‌ம ்.

உலக‌ம் வெ‌ப்பமயமாத‌ல் ‌நிக‌ழ்வா‌ல் நமது நாடு வற‌‌ட்‌சி‌யி‌ல் ‌சி‌க்‌கி‌‌விடாம‌ல் தடு‌ப்பத‌ற்கான தொலைநோ‌க்கு‌ப் பா‌ர்வையுட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் சோ‌ஸ் வலியுறுத்தினா‌ர ்.

இ‌ந்த மாநா‌ட்டி‌ல் நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு பகு‌திகளை‌ச் சே‌ர்‌ந்த 250‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வ‌ல்லுந‌ர்க‌ள் கல‌ந்து கொ‌‌ண்டன‌ர்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments