Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இருந்து லாரி மூலம் உலர் திராட்சை, முலாம் பழம் இறக்குமதி!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:02 IST)
42 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து லாரி மூலமாக உலர் திராட்ச ை, முலாம் பழம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட ன.

இந்திய ா, பாகிஸ்தானுக்கு இடையே லாரி மூலமாக சரக்கு போக்குவரத்து (ஏற்றுமதி, இறக்குமதி) துவங்கியுள்ளத ு. பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் அமைந்துள்ள வாகா எல்லை மூலமா க, இந்த சரக்கு போக்குவரத்துக்கு இரு நாடுகளும் அனுமதி அளித்த ன.

இதன்படி கடந்த புதன்கிழமை இந்தியாவில் இருந்து தக்காளி பெட்டிகளுடன் 15 லாரிகள் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குச் சென்ற ன. இதை பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கொடியசைத்து அனுப்பி வைத்தார ்.

பாகிஸ்தானில் இருந்து மூன்று லாரிகளில் உலர் திராட்சை உட்பட பல வகையான உலர் பழங்களும ், முலாம் பழமும் வாகா எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்தத ு. இந்த உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தத ு. ஒவ்வொரு லாரியிலும் 500 பெட்டிகளில் உலர் பழங்கள் இருந்த ன.

பாகிஸ்தான் சரக்கு லாரிகளை வாகா எல்லையில் பாகிஸ்தான் சுங்க இலாக உதவி ஆணையாளர் தகிர் அகமது தார ், வாகா எல்லைச் சாவடி அதிகாரி சுஜ்ஜா கஜாம ி, விங் கமான்டர் கர்னல் தரிக் ஜனுஜா ஆகியோர் உட்பட சுங்க அதிகாரிகளும ், ராணுவ அதிகாரிகளும ், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர ்.

பாகிஸ்தான் சுங்க இலாக உதவி ஆணையாளர் தகிர் அகமது தார் இந்த விழாவில் பேசம் போத ு, இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான சாலை வழி வர்த்தகத்தால ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும ். இந்த சாலை வழி சரக்கு வர்த்தகத்தை துவக்குவது என ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு எடுக்கப்பட்டத ு. அடுத்த பத்து நாட்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானத ு.

இந்தியாவைச் சேர்ந்த சரக்கு லாரிகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்டோபர் 1 ஆம் தேதி நுழைந்த ன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கப் பரிசோதனை அலுவலகத்தை பிரதமர் செளகத் அஜிஜ ், அன்றே தொடங்கி வைப்பதாக இருந்தத ு. அவரால் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்ல ை.

அத்துடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்கள ்) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர ். இதனால் அன்றே இந்தியாவைச் சேர்ந்த லாரிகளை சுங்கப் பரிசோதனை முடித்து பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க முடியவில்ல ை. இரண்டு நாட்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டத ு.

இப்பொழுது இந்தியாவைச் சேர்ந்த லாரிகள் சரக்குகளுடன் பாகிஸ்தானில் எந்த பகுதிக்கும் செல்லலாம ். அதே போல் பாகிஸ்தானைச் சேர்நத லாரிகளும ், இந்திய நகரங்களுக்கு செல்ல முடியும ்.

இநத் லாரிகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு பாஸ்போர்ட ், விச ா, சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையில்ல ை. சுங்கச் சாவடியில் ஓட்டுநரின் பெயர ், புகைப்படம ், அடையாள அட்டை எண ், ஓட்டுநர் உரிமத்தின் எண ், முகவரி மற்றும் இதர முக்கியமான தகவல்கள் அடங்கிய அனுமதி அட்டைய ை, சுங்கத்துறை வழங்கும ்.

இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சரக்கு லாரிகள் வாகா எல்லையில் நிறுத்தப்படும ். இதிலுள்ள சரக்கை கூலியாட்கள் (போர்ட்டர ்) மூலம் பாகிஸ்தான் லாரியில் மாற்றப்படும ். அதே போல் பாகிஸ்தானைச் சேர்ந்த லாரிகளில் உள்ள சரக்குகள் இந்திய லாரிக்கு மாற்றப்படும ்.

இப்போது நேரடியாகவே லாரிகளில் சரக்கு கொண்டு செல்லாம் என்று அதமது த ார் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments