Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் ப‌ற்‌றி விமர்சனம் : கருணாநிதி ஆஜராக ஆ‌ந்‌திர நீதிம‌ன்ற‌ம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (13:04 IST)
ராம‌ர் ப‌ற்‌றி ‌‌விம‌ர்சன‌ம் செ‌ய்ததற்காக தொடர‌ப்ப‌ட்ட அவதூறு வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ஆ‌ந்‌திர ‌நீ‌திம‌ன்ற‌ம் நவம்பர் 1ஆ‌ம் தே‌தி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கருணா‌நி‌தி‌க்கு ச‌ம்ம‌ன் அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியைச் சேர்ந்தவர் வழ‌க்க‌றிஞ‌ர் வால்மீகி மல்லிகார்ஜுனா. இவர் கடந்த 24ஆ‌ம் தேதி ஆதோனி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக முதலமைச்சர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தெடர்ந்தார்.

அதில ், " பொதுக்கூட்டம் ஒன்றில் கருணா‌நி‌தி பேசும்போது, "ராமர் என்ன என்ஜினீயர ா? அவர் எந்த கல்லூரியில் படித்தார் என்றும், ராமர் மது அருந்தும் பழக்கமுடையவர்'' என்றெல்லாம் அவதூறாக பேசினார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டது. இதனால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போத ு, வழ‌க்‌க‌றிஞ‌ர் வால்மீகி மல்லி கார்ஜுனா, பத்திரிகைகளில் வெளியான கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனங்களை நீதிம‌ன்ற‌த்தில் சமர்ப்பித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிரண்குமார், "கருணாநிதி மீது 298, 153ஏ, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். பின்னர் அடுத்த மாதம் 1ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஆஜராகும் படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments