Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வரைபடம் சி.டி.யில் வெளியீடு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (20:07 IST)
சென்னையைச் சேர்ந்த ட ி. ட ி. க ே. மேப்ஸ் நிறுவனம் இந்திய வரை படத்தை குறுந்தகட்டில் வெளியிட்டுள்ளத ு.

ட ி. ட ி. க ே. ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிரிவான ட ி. ட ி, கே மேப்ஸ ், இந்தியாவின் பல நகரங்களை தெளிவாக காணும் வகையில் இந்தக் குறுந்தகடு வெளியிட்டுள்ளத ு.

இதில் இந்தியாவைப் பற்றிய விபரங்கள் அடங்கிய 700 படங்கள் இடம் பெற்றுள்ள ன. இந்தியாவின் பொதுவான வரைபடம ், பூகோள ரீதியான வரைபடம ், மாநில எல்லைகளை காட்டு்ம் வரைபடம் என பல பிரிவுகளில் வரைபடங்கள் அடங்கியுள்ள ன.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்கள ், தொன்மையான நாகரீகத்தை எடுத்துக் காட்டும் இடங்கள ், சுற்றுலா தலங்கள ், விவசாயம ், மக்கள் தொக ை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ள ன.

இதில் குறிப்பிட்ட நகரின் அல்லது கிராமத்தை அடையாளம் காண வேண்டும் என்றால் சிரமப்பட்டு தேட தேவையில்ல ை. பிளேஸ் ஃபைன்டர் என்ற வசதியை பயன்படுத்தி சிற்றூரின் பெயரை டைப் செய்தால் போதும ், அந்த சிற்றூரை கோடிட்டு காண்பிக்கும ். அதை நமக்கு தேவையான அளவு பெரிதாக்கி பார்த்துக் கொள்ளலாம ். இவ்வாறு எந்த இடத்தையும் பெரிதாக்கி சிறு தெருவை கூட பார்க்கும் வசதி உள்ளத ு.

இதன் மற்றொரு சிறப்பம்சம ், தூரத்தை கணக்கிடும் வசத ி. இந்த வசதியை பயன்படுத்தி ராமேஸ்வரத்திற்கும ், அயோத்திக்கும் இடையே உள்ள தூரம் எத்தனை கிலோ மீட்டர் என்பதை சில விநாடிகளில் தெரிந்து கொள்ளலாம ். அத்துடன் குறிப்பிட்ட ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரம் அல்லது மாவட்ட தலைநகரம் எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம ்.

இந்தியாவில் உள்ள எல்லா ஊர்களின் எஸ ். ட ி. ட ி. எண் ( உள் நாட்டு நேரடி தொலை பேசி ) ஐ. எஸ ். ட ி. ( அயல்நாட்டு நேரடி தொலை பேசி ) எண்களையும் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளத ு. இது போன்றே கடிதங்களில் அவசியம் குறிப்பிடவேண்டிய குக்கிராமம் முதல் பெரிய நகரத்தில் உள்ள இடங்கள் வரை பின்கோடு எண்ணையும் கண்டுபிடிக்கும் வசதி உள்ளத ு.

இது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளத ு. பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வர ை, ட ி. ட ி. க ே. ச ி. டி மேப்பில் இந்தியாவை பற்றிய பூகோள அறிவ ு, வரலாற ு, கலாச்சாரம் உட்பட பல்வேறு விபரங்களை எளிய வழியில் தெரிந்து கொள்ளும் வசதிகள் அடங்கியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

Show comments