Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூல் நூற்கும் போதே மின்சாரம் உற்பத்தி!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (19:56 IST)
கதர் நூல் நூற்கும் போதே மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் ராட்டையை பெங் களூருவைச ் சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார ்.

ராட்டையில் நூல் நூற்பது மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்ல, அது சக்தி வாய்ந்த அகிம்சையின் ஆயுதமாக சுதந்திரப் போராட்ட காலத்தில் பயன்பட்டத ு. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கையாலேயே நூல் நூற்று தேவையான உடைகளை தயாரித்துக் கொண்டனர ்.

ராட்டையில் தினமும் நூல் நூற்பது ஒரு வேள்வியாகவே நடத்தப்பட்டத ு. காந்தியும் ராட்டையும் இணைபிரியாத அம்சங்கள ்.

இன்றளவும் காதி கிராமத் தொழில்கள் மூலம் ராட்டையில் நூல் நூற்பதில் இலட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர ். இவர்களின் வாழ்க்கையின் பொருளாதார ஆதாரம ே, கதர் நூல் நூற்பத ு, கதர் துணிகளை உற்பத்தி செய்வதுதான ்.

பிரிட்டிஷாருக்கு எதிரான அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டம ், அடையாள எதிர்ப்பு போராட்டம் மட்டும் அல் ல. அது பிரிட்டிஷ் பொருளாதார அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்த போராட்டம ்.

இவ்வாறு இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ராட்ட ை. இந்த ராட்டையில் நூல் நூற்கும் போதே மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் நவீன ராட்டையை கண்டுபிடித்துள்ளார் பெங்களுரைச் சேர்ந்த பொறியாளர் ஹிர்மத ். இவர் இந்த நவீன ராட்டையை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்திற்காக உருவாக்கியுள்ளார ்.

இந்த நவீன ராட்டையில ், இரண்டு மணிநேரம் நூல் நூற்றால ், ஒரு வீட்டுக்கு தேவையான ஒரு விளக்கையும ், ரேடியோவையும் 6 முதல் 7 மணி நேரம் வரை இயக்க முடியும ். இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக் க, பராமரிக்க தேவையில்லாத பேட்டரி (எமர்ஜென்ஸி விளக்குகளில் பயன்படுத்தும் ) இணைக்கப்பட்டுள்ளத ு. இது மின் சேமிப்பு கலனாக பயன்படுகிறத ு. இதன் தயாரிப்பு செலவு ர ூ. 3,000.

இந்த ராட்டையை பயன்படுத்தி நூல் நூற்கும் போத ே, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்த ி, டிரான்சிஸ்டர் வானெலி மூலம் நாட்டு நடப்புகளையும ், மனதிற்கு ரம்மியமான இசையையும் கேட்டுக் கொண்டே சம்பாதிக்கலாம ்.

மின் உற்பத்தி செய்யும் இரண்டு லட்சம் ராட்டையை நாடு முழுவதும் உள்ள காதி உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் திட்டமிட்டுள்ளது என்று சிறு மற்றம் நடுத்தர தொழில்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்த ன.

இதை வருகின்ற நவம்பர் மாதம் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments