Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு அடைப்பிற்குத் தடை விதித்து நீதித்துறையின் அத்துமீறல் : மார்க்சிஸ்ட்!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:35 IST)
சேது சமுத்திரத் திட்டப் பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பிற்கு தடை விதித்தது நீதித்துறையின் அத்துமீறல் என்றும், அது தேவையற்றது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கொல்கட்டாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "உச்ச நீதிமன்றம் தடை நீதித்துறையின் தேவையற்ற அத்துமீறல். வேலை நிறுத்த உரிமைக்கு எதிராக எந்தவிதமான பொதுவான தடையும் இருக்க முடியாது" என்று காட்டமாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலவுவது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அல்ல என்று கூறிய பிரகாஷ் காரத், முழு அடைப்பிற்கு ஆதரவளித்தது தொழிற்சங்கங்களின் தன்னிச்சையான முடிவு என்று கூறினார்.

வேலை நிறுத்தம் செய்வதை சட்டத்திற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய பிரகாஷ் காரத், சேது சமுத்திரத் திட்டத்தை மத அடிப்படையில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் தடுக்க நினைப்பதும், அரசியல் ஆதாயத்திற்கு முயற்சிப்பதும் கண்டனதிற்குரியது என்று கூறினார்.

இவர்கள் ராமர் பாலம் என்று கூறுவது இயற்கையாக ஏற்பட்ட புவியியல் அமைப்புகள்தான் என்றும், அதனை மதப் பிரச்சனையாக்கி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அது நினைவேறாது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments