Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் வெள்ளம் : பாட்னா மூழ்கியது

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (11:29 IST)
கடந்த 25 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பீகாரில் கொட்டித் தீர்த்தது. பீகார் மாநிலத்தின் பாட்னா நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த பருவ மழைத் தொடங்கி இதுவரை பாட்னா நகரில் 1531 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 74.8 மி.மீ. மழை கொட்டியுள்ளது.

வரலாறு காணாத மழையால் பாட்னா நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணா நகர், பாடலிபுத்ர நகர், கங்கார்பாக் உள்பட பல இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கி உள்ளது.

பெரும்பாலான வீடுகளில் கீழ்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம் ஆகியவையும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டு கிடக்கின்றன. ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இதற்கிடையே பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மேலும் 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Show comments