Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணை தேவை : மார்க்சிஸ்ட்!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (17:36 IST)
உச் ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபத ி சபர்வால ் மீதா ன குற்றச்சாட்டுக்கள ் மீத ு விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளத ு.

உச்ச நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி சபர்வால ், டெல்லியில் அலுவவகங்கள ், கடைகள ், வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டார ். அவரின் இரண்டு மகன்களும் வணிக வளாகங்களை கட்டும தொழிலில் ஈடுபட்டுள்ளதால ், அவர்களுக்கு சாதகமா க, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மிட் டே என்ற தினசரி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டத ு.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம ், மிட் டே யின் பதிப்பாளர ், ஆசிரியர ், மற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்துத ு.

இந்த சிறை தண்டனைக்க ு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளத ு.

பத்திரிக்கையாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்ப ு, நாடு முழுவதும ், பல்வேறு மட்டங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளத ு.

இந்த பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ச் கட்சியின் அதிகார பூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் தலையங்கத்தில் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதாவத ு:

“சபர்வால் மீதான குற்றச்சாட்டில ், எந்த அளவு உண்மை இருக்கின்றது என்பத ு, விசாரணை நடத்தினால் தான் தெரியவரும ். எனது நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்த தவறும் இல்லை என்று நீதிபதி சபர்வால் வெளிப்படையாகவே கூறியுள்ளார ்.

இந்த பிரச்சனையில் தொடர்பு உள்ள பத்திரிக்கையாளர்கள ், நீதிபதி சபர்வால் மீதான புகார்களை நிருபிக்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர ். எனவே இதில் உண்மை என்ன என்பது விசாரணை நடத்தினால் தான் தெரியவரும ்.

இந்த விசாரணை நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும ். குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும ், அரசு அதிகாரம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதிலும் நீதிமன்றங்களின் பங்கு மகத்தானத ு.

நீதித்துறையின் ஒழுங்கீனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய தனியாக ஒரு நடைமுறையை உருவாக்குவது அவசியம் என்று தோன்றுகிறத ு. நீதித் துறை மீது குற்றங் குறைகளை எழுப்ப வசதியாக வரம்ப ு, வரைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம ்.

எந்த சந்தர்ப்பத்திலும் நீதித்துறையின் அதிகாரம ், கருத்துச் சுதந்திரத்தின் உரிமையை நசுக்க வாய்ப்பளிக்க கூடாத ு ” என்று பீப்பிள் டெமாக்ரசி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments