Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித் துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல : சோம்நாத் சட்டர்ஜி!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (11:23 IST)
நீதித் துறை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று யாரும் நினைக்க கூடாது என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார ்.

டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள ், அலுவலகங்கள ், வீடுகளை இடிப்பதற்கு உச்சநீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி சபர்வால் உத்தரவு பிறப்பித்தார ்.

இந்த உத்தரவுகள ், பெரிய வணிக வளாகங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அவரின் மகன்கள் இருவருக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்டன என்று மிட் டே நாளிதழ் கடந்த மே மாதம் தொடர் கட்டுரைகளை வெளியிட்டத ு. இதில் நீதிபதி சபர்வால் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தத ு.

இந்த குற்றச்சாட்டுக்களை நீதிபதி சபர்வால் மறுத்தார ்.

இந்நிலையில ், உச்ச நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி சபர்வாலுக்கு எதிராக குற்றச்சாற்று கூறி ய, மிட் டே தினசரியைச் சேர்ந்த செய்தியாளர்கள் நான்கு பேர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார்கள் என்று குற்றம்சாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியத ு.

டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த ு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டத ு. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம ், மிட் டே செய்தியாளர்களுக்கு விதித்த தண்டனைக்கு தடை விதித்துள்ளத ு.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத ு. அத்துடன் நீதித்துறையின் உரிமைகள் குறித்தும் பரந்த அளவில ், பல தரப்பினரிடையே விவாதத்தை துவக்கி வைத்துள்ளத ு.

இது குறித்து மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில ்,

“நான் நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன ். ஆனால் நீதித்துறை என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று யாராவது நினைத்தால ், அதை ஜனநாயக அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாத ு. நாடாளுமன்றம ், அரசு நிர்வாகம ், ராணுவம ், நீதித்துறை எதுவாக இருந்தாலும் சர்வாதிகார முறையில் செயல்படக்கூடாத ு.

பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்கா க, நீதிமன்றம் ஆணைகள் பிறப்பிக்கப்படுவதாக தோன்றுகிறத ு. இந்த ஆணைகள் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்ற ன. இவைகளினால் பல சந்தேகங்கள் எழுகின்ற ன. இதற்கு நீதிபதி ஒருவரைப் பற்றி சந்தேகம ோ, கேள்வியோ எழுந்தால் எதுவும் செய்யமுடியாது என்று அர்த்தம ா?

நீதித்துறை இயல்புக்கு மீறி பதற்றப்படும் போக்கை கைவிட வேண்டும ். நீதித்துறைக்கும ், பொதுமக்களுக்கும ், ஊடகங்களுக்கும் இடையே தேவையில்லாமல் எற்படும் மோதலுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும ் ” என்று சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுததியுள்ளார ்.

இதனிடையே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம ், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும ், இதை ஆய்வு செய்வதற்க ு, இதுவே சரியான நேரம் என்றும் மூத்த வழக்கரிஞரும ், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார ்.

மற்றொரு மூத்த வழக்கரிஞரான ஹரிஸ் சால்வ ே, பத்திரிக்கையாளர்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த சிறை தண்டனை விவேகமானதாக தோன்றவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments