Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (12:40 IST)
தமிழக அரசு முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 7 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க பிறப்பித்த அவசர சட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

தமிழக அரசு சமீபத்தில் பிற்பட்ட வகுப்பு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், முஸ்லீம் மற்றம் கிறிஸ்தவர்களுக்கு 7 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்தை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்ற வழக்கறிஞர் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த 15 ந் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. இது சட்டவிரோதமானது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. இதிலிருந்து 7 விழுக்காட்டை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடாக கொடுக்கின்றனர்.

இதனால் பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். நான் கொங்கு வேளாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். மொத்த மக்கள் தொகையில் கொங்கு வேளாளர் சமூகத்தினை சேர்ந்தவர்கள் 8 விழுக்காடு உள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் 8 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குமாறு கேட்க உரிமை உள்ளது.

மத அடிப்படையில் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனியாக இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு காரணம் வாக்கு வங்கி தான்.

புதிய சட்டத்தால், எங்களைப் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள, இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை, தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜரானார். அவர் வாதிடும் போது கூறியதாவது, இந்த அவசர சட்டம் கொண்டு வரும் முன்பு, சட்ட விதிகள் சரியாக பின்பற்றப் படவில்லை. 9வது அட்டவனையில் சேர்க்கப்பட்ட தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையிதான் இந்த மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். எனவே இதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் ஆளுநரே இந்த அவசர சட்டத்தை பிறப்பித்தது சட்ட விரோதமானது. ஆளுநருக்கு இந்த சட்டத்தை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. ஏற்கனவே பிற்பட்டோருக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. அதில் சிறுபான்மை பிரிவினருக்கு என ஒரு பிரிவை ஏற்படுத்தி, இட ஒதுக்கீடு கொண்டு வருவது சட்டப்படி தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன் சிறு பான்மையினருக்கு அரசு தனி இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வரக்கூடாது. 9வது அட்டவணையில் திருத்தம் செய்யாமல ், இத்தகைய இ ட ஒதுக்கீட்டை சட்டப்படி கொண்டு வரமுடியாத ு. எனவே அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் இவ்வாறு விஜயன் வாதாடினார ்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விடுதலை கூறியதாவத ு, ஆந்திராவில் மத வாரியாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்தது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளத ு.

அதற்கு பிறக ு, 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஆந்திர அரசு கொண்டு வந்தத ு. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளத ு.

ஆந்திராவில் கொண்டு வரப்பட்ட 4 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ளத ு. அதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டத ு.

கடந்த 20 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடுகளும ், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இ ட ஒதுக்கீடு அமலில் உள்ளத ு. ஏற்கனவே உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் திருத்தம் எதுவும் கொண்டு வரப்படவில்ல ை. எனவே ஜனாதிபதி ஒப்புதல் பெறத் தேவையில்ல ை.
அவசர சட்டம் கொணம்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளத ு. எனவே இடைக் காலத்தடை விதிக்க கூடாத ு. அவசரச் சட்டத்தில் அரசியல் உள் நோக்கம் எதுவும் இல்ல ை.

பிற்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி தான ், இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டத ு.
2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பட ி, தமிழகத்தில் 6 கோடியே 47 லட்சம் மக்கள் இருக்கின்றனர ். இதில் 37 லட்சம் கிறிஸ்தவர்களும ், 34 லட்சம் முஸ்லிம்களும் உள்ளனர ். இவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது சரியானதுதான ்.
இந்த வழக்கில் அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும ். அதுவரை சட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாத ு. இவ்வாறு விடுதலை தனது வாதத்தின் போது கூறினார ்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள ்,
இடஒதுக்கீடு அவசரச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாத ு. இந்த வழக்கில் மத்திய அரசும ், தமிழக அரசும் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும ். அதிலிருந்து 2 வாரங்களுக்குள் மனுதாரர் அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும ்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 19 ந் தேதி நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments