Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுவை : இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்!

புதுவை : இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்!

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (19:17 IST)
புதுவமருத்துவமனையிலசிகிச்சைக்காசேர்த்தவரஉயிரிழந்ததற்கநீதி விசாரணகோரி இந்தியககம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் நா.ா. கலைநாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக செல்லத்துரை என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு டாக்டர் முருகேசன் சிகிச்சை அளித்து வந்தார்.

செல்லத்துரைக்கு சீறுநீரகம் சிறிதளவு இயங்குவதால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கும் படி டாக்டர் முருகேசன் ஆலோசனை தெரிவித்தார்.

இதனடிப்படியில் செல்லத்துரைக்கு செய்ய இருந்த சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முருகேசன் இரண்டு நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.

செல்லத்துரை உயிரிழந்ததற்கு காரணம் டாக்டர் முருகேசனின் ஆலோசனைதான் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதனால் டாக்டர் முருகேசனுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்று புதுவை அரசு பொது மருத்துவமனை எதிரே, செல்லத்துரை மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும், அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil