Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா-‌சீனா எ‌ல்லை‌ப் பே‌ச்‌சி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (18:54 IST)
இ‌‌ந்‌‌திய ா - ‌ சீனா இடை‌யி‌ல் உ‌ள்ள எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக இரு நாடுக‌‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு இடை‌யி‌ல ் ப ீ‌ஜி‌ங்‌கி‌ல் இன்று நடைபெ‌ற்ற பே‌ச்சி‌ல் மு‌க்‌கிய மு‌ன்னே‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

" இ‌‌ந்‌திய - ‌சீன எ‌ல்லைகளை முடிவு செ‌ய்வது தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ன் தே‌சிய‌‌ப் பாதுகா‌ப்பு‌ச் செயலாள‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன், ‌சீனா‌வி‌ன் துணை அயலுறவு‌த் துறை அமை‌ச்ச‌ர் டா‌ய் ‌பி‌ங்கோ ஆ‌கியோரு‌க்கு இடை‌யி‌ல் பயனு‌ள்ள மு‌ன்னே‌ற்றம‌ளி‌க்கு‌ம் பே‌ச்சு‌க்க‌ள் நடைபெ‌ற்ற ன" எ‌ன்று ‌சீனா‌வி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌விடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாத‌ம் நடைபெ‌ற்ற 10ஆவது சு‌ற்று‌ப் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ன ் போத ு, " வெ‌ளி‌ப்படையா ன, ந‌ட்பு‌ரீ‌தியா ன, ஒ‌த்துழை‌ப்பு அ‌ளி‌க்கு‌ம் ‌விதமான சூழ‌லி‌ல் பே‌ச்சு நடைபெ‌ற்றத ு" எ‌ன்று கரு‌த்து‌ கூற‌ப்ப‌ட்டது.

எ‌ம்.கே. நாராயண‌ன் ‌விரை‌வி‌ல் இ‌ந்‌தியா ‌திரு‌ம்‌பியவு‌ட‌ன் பே‌ச்சின் விவரங்களை ‌வி‌ரிவாக‌த் தெ‌ரி‌வி‌ப்பா‌ர். இ‌ந்த‌ப் பே‌‌ச்சு இருதர‌ப்பு உறவுக‌ளிலு‌ம் மெ‌ன்மையான அணுகுமுறையை வலு‌ப்படு‌த்த உத‌வியாக இரு‌க்க வே‌ண்டிய தேவையை‌ச் சு‌ட்டி‌க்கா‌ட்டுவதாக உள்ளதென கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்த ஆ‌ண்டு இறு‌தி‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌சி‌‌ங் பீ‌ஜி‌ங் செ‌ல்ல‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர். அதையடு‌த்து இருதர‌ப்பு‌‌ச் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திக‌ளிடை‌யிலான அடு‌த்தக‌ட்ட‌ப் பே‌ச்சை பீ‌ஜி‌ங்‌கி‌ல் நட‌த்த இ‌ந்‌தியாவு‌ம ், ‌‌ சீனாவு‌ம் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன எ‌ன்று‌ம் அ‌‌ந்த‌ச் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments