Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:59 IST)
பாரத அரசு வங்கியுடன ், இதன் ஆறு துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர ்.

பாரத அரசு வங்கிக்கு ஏழு துணை வங்கிகள் உள்ள ன. இவை ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிர ா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத ், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானீர் மற்றம் ஜெய்ப்பூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியால ா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ஆகியவைகளாகும ்.

வங்கித் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சிறிய வங்கிகள் தனியாக இயங்கி தாக்கு பிடிக்க முடியாத ு. வெளிநாட்டு வங்கிகள ், தனியார் வங்கிகளுடன் போட்டியிட வேண்டும் என்றால ், அதிகளவு மூலதனம் வேண்டும ். நாடு முழுவதும் கிளைகள் தேவை என்பன போன்ற காரணங்களினால ், பாரத அரசு வங்கியுடன ், அதன் துணை வங்கிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டத ு.

இதனால் தங்களின் நலன் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள ், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர ்.

பாரத அரசு வங்கியுடன ், அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில ், ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா வங்கியை தவி ர, மற்ற ஆறு வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் வருகின்ற 27 ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர ்.

பாரத அரசு பாங்க் ஆஃப் செளராஷ்டிராவின் இயக்குநர் குழுவும ், பாரத அரசு வங்கியின் இயக்குநர் குழுவும் இந்த இரு வங்கிகளின் இணைப்பிற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள ன. ஆகவே இந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தூரின் அகில இந்திய அதிகாரிகள் நடவடிக்கை குழுவின் தலைவர் அலோக் கோரி தெரிவித்தார ்.

மேலும் அவர் கூறுகையில ், பாரத அரசு வங்கியின் துணை வங்கிகள் தனித்தன்மை வாய்ந்ததவ ை. அவை அவை இயங்கும் மாநிலத்தில் பரந்த அளவில் கிளைகளை கொண்டுள்ள ன. அத்துடன் நல்ல இலாபமும் சம்பாதிக்கின்ற ன. பாரத அரசு வங்கி பெரிய வங்கியாக வளரவும ், தனியார் வங்கிகளின் போட்டியை சமாளிக்கவும் இவற்றை இணைத்துக் கொள்வது எளிதான வழி என கருதுகிறது என்று அலோக் கோரி குற்றம் சாட்டினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments