Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒ‌ப்ப‌ந்த‌ம் - புதிய அரசு வரை கா‌‌த்‌திரு‌க்கலா‌ம்: சீதாராம் யெச்சூரி!

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (15:59 IST)
அணு சக்தி ஒப்பந்தத்தில் புதிய அரசின் அணுகுமுறை என்ன என்பதை பார ்‌த்து ‌வி‌ட்டு அ தன்பிறகு ஓர் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்பதில் தவறில்லை எ‌ன்று மா‌ர்‌‌க்‌சிய க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் ‌சீதாரா‌ம் யெ‌ச்சூ‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்த கருத்துக் கணிப்பில் மிகவும் மோசமான அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங், புஷ்ஷை சிறந்த அதிபராக வர்ணித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த 16 மாதங்களில் அதிபர் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலில் புஷ் கட்சி தோல்வி அடைவது உறுதி. இதனால் புதிய நிர்வாகம் பதவி ஏற்கும் எ‌ன்று யெ‌ச்சூ‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் புதிய அரசின் அணுகுமுறை என்ன என்பதை பார்க்கலாம ். அதன்பிறகு இதில் ஓர் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்பதில் தவறில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அவசரப்படத் தேவையில்லை என ‌சீதாரா‌ம் யெ‌ச்சூ‌ரி கூ‌றினா‌ர்.

அமெரிக்க அதிபர் இதில் அவசரம் காட்டுவது தன்னை பெரிய ஆளாக உலக அரங்கில் பிரபலப்படுத்திக் கொள்ளத்தான் எ‌ன்றா‌ர் யெ‌ச்சூ‌ரி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments