Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் அங்கீகாரம் : டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (17:26 IST)
புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் பழைய அந்தஸ்து தொடர வேண்டும் என்று போராட்டம் நடத்திவரும் குழுவினர ், டெல்லியில் மூன்று கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர ்.

புதுவையில் ஜவஹர்லால் இன்ஸ்டியூட் ஆ ஃப் போஸ்ட்கிராஜூவேட் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையும ், மருத்துவக ் கல்லூரியும் அமைந்துள்ளத ு. இது சுருக்கமாக ஜிப்மர் என அழைக்கப்படுகிறத ு.

புதுவையில் இயங்கிவரும் ஜிப்மர் மருத்துவமனையும ், அதனுடன் இணைந்த கல்லூரியும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்க ி வருகின்ற ன.

மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அங ்க ீகாரம் வழங்க முடிவு செய்துள்ளத ு. இநத அந்தஸ்து வழங்குவதால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும ், மருத்துவமனையும் அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் சுயேச்சையாக இயங்க முடியும ். மருத்துவமன ை, மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்த முடியும ். மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகளை தொடங்க முடியும ். இதற்கு தேவையான நிதியை சொந்தமாக திரட்ட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறத ு.

ஆனால் இதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சியினர ். வர்த்தக சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர ். இது ஜிப்மருக்கு தன்னாட்சி வழங்குவது என்ற பெயரில ், தனியார் மயமாக்கும் முயற்சிய ே. இதனால் ஏழ ை, எளிய பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத ு. தற்போதுள்ள இலவச சிகிச்சை என்பது மாற ி, கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அச்சப்படுகின்றனர ்.

மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு நன்கொட ை, கல்வ ிக ் கட்டணம் என இலட்சக்கணக்கில் செலுத்த வேண்டியதிருக்கும ். இதனால் கீழ் மட்ட, நடுத்தர வருவாய் பிரிவினரின் பிள்ளைகள் மருத்துவக் கல்லலூரியில் சேர்ந்து படிப்பது என்பது கனவாக ஆகிவிடும் என அச்சப்படுகின்றனர ்.

மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரியும ், ஜிப்மர் மருத்துவமனைக்கு பழைய அந்தஸ்து தொடர வேண்டும் என்று மருத்துவர்கள ், மருத்துவக் கல்லூரி மாணவர்கள ், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள ், வர்த்தக பிரமுகர்கள் அடங்கிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளத ு.

இந்த குழுவினர் உண்ணாவிரதம ், ஆர்ப்பாட்டம ், கடை அடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர ். இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் மூன்று கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர ்.

டெல்லியில் நடத்தப் போகும் போராட்டம் பற்ற ி, நடவடிக்கை குழுவின் தலைவர் ட ி. முருகன் செய்தியாளர்களிடம் விளக்கினார ்.

அப்போது அவர ், புது டெல்லியில் போராட்டம் நடத்துவது என்ற முடிவு அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டத ு. இநத கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச ி, பாரதீய ஜனத ா, ஆர ். எஸ ். ப ி., குடியரசு கட்ச ி, விடுதல ைச ் சிறுத்தைகள ், புதுவை மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர ்.

இந்த நடவடிக்கை குழு இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும ், ஊழியர்களின் தற்போதைய நிலையே தொடர வேண்டும ், ச ி, டி பிரிவு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் போது புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும ், மருத்துவ கல்லூரியில் 20 விழுக்காடு இடங்கள் புதுவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப் போகின்றோம ்.

இதில் இரண்டு அம்சங்கள் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழ ு, செப்டம்பர் 7 ந் தேதி மாநிலக்களவையில் அறிக்கை சமர ்ப ்பித்துள்ளத ு. இதில் இந்த கோரிக்கைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்ல ை. எனவே போராட்டத்தை தொடருவது என முடிவு செய்யப்பட்டத ு.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தின் முன்பு தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளத ு. இதற்கான தேதி முடிவு செய்யப்படவில்ல ை. இந ்த போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சியும ், தெலுங்கு தேச கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் முருகன் தெரிவித்தார ்.

புதுவை மருத்துவமனையில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாத ு, தமிழ் நாட்டின் வட மாவட்டங்களைச் சேர்ந்த வர ்களும ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவு சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments