Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை : 6 மாதத்திற்கு ஒத்திப்போடு - மார்க்சிஸ்ட்!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (16:05 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதை 6 மாத காலத்திற்காவது மத்திய அரசு தள்ளிப் போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள ஐ.மு. - இடது கூட்டணித் தலைவர்களைக் கொண்ட ஆய்வுக் குழு நாளை கூடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் காரத் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று காரத் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், 123 ஒப்பந்த வரைவு ஆகியவற்றின் மீது தங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளை விளக்கி இடது கூட்டணி விடுத்த அறிக்கைக்கு விளக்கமாக அரசு நேற்று பதிலளித்துள்ளது.

நாளை டெல்லியில் ஐ.மு. - இடது ஆய்வுக் குழுவின் 2வது கூட்டம் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments