Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.மு. - இடது குழு சந்திப்பு : விவாதப் பொருள் குறித்து முடிவு!

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (19:39 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், அணு சக்தித் துறையில் தன்னிறைவு ஆகியன குறித்து விரிவாக விவாதிப்பது என்று ஐ.மு. - இடது கூட்டணி கட்சி உறுப்பினர்களைக் கொண்ட தனிக்குழு முடிவு செய்துள்ளது!

தலைநகர் டெல்லியில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று கூடிய 15 பேர் கொண்ட குழு, 45 நிமிட நேரம் விவாதித்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர், 123 ஒப்பந்தத்தை ஹென்ரி ஹைட் சட்டம் எந்த அளவிற்கு கட்டுப்படுத்துகிறது, அணு சக்தித் துறையில் நமது நாட்டின் தன்னிறைவு, அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு, நமது அயலுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் ஆகிய அம்சங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விவாதிப்பதென முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments