Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒப்பந்தம் திருதராஷ்ட்ரனின் ஆலிங்கனம் - இடதுசாரிகள்!

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (21:44 IST)
இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம், அமெரிக்காவின் திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தில் (மல்யுத்தப் பிடி) இந்தியாவை சிக்க வைப்பதாகும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!

புதுடெல்லியில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் கூட்டணி, இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நாளை சந்தித்துப் பேசவுள்ள நிலையில், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றங்கள் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி தங்களை யாரும் திருப்தி படுத்திவிட முடியாது என்று கூறியுள்ள பிரகாஷ் காரத், நாளைய கூட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை தெளிவாக முன்வைக்கப் போவதாகவும், அதுமட்டுமின்றி, விஞ்ஞானிகள் அயலுறவுக் கொள்கையில் சுதந்திரம் தேவை என்கின்ற எண்ணமுடையோர், ராணுவ ரீதியான, எரிசக்தி ரீதியிலான சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்போரின் கருத்துக்களையும் எடுத்து வைக்கப் போவதாக கூறினார்.

அணு சக்தி தொழில்நுட்பம் தொடர்பாக கிடைக்கவிருக்கும் மறுமலர்ச்சி என்ற பேருந்தை தவறவிட்டுவிடக்கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பேருந்து பயணம் நம்மை அமெரிக்காவின் திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தில்தான் சிக்க வைத்துவிடும் என்று காரத் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments