நடிகர் சல்மான் கான் கைது செய்யப்பட்டார்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2007 (15:42 IST)
இந்தி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக விமானத்தில் வந்து இறங்கியதும் காவல்துறையினர் ஜோத்பூரில் அவரை கைது செய்தனர்.

மானை வேட்டை ஆடிய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சல்மான் கான், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த ஜோத்பூர் அமர்வு நீதிமன்றம் அவரது முறையீட்டை நிராகரித்தது மட்டுமின்றி, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடி ஆணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்த சல்மான் கான், ஜோத்பூர் வந்து இறங்கியதும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று மாலைக்குள் அவர் ஜோத்பூர் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

Show comments