முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (10:36 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட ்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று காலையில் திடீரென தலை சுற்றலும், சோர்வும் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாஜ்பாய்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித ்து வருகின்றனர்.

83 வயதாகும் வாஜ்பாய் மிகவும் சோர்வாக இருந்தார். மருத்துவமனையில் உள்ள இருதயம் மற்றும் நரம்பு தொடர்பான சிறப்பு பிரிவில ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருதய நோய் நிபுணர்கள் மற்றும் நரம்பு சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள ் குழுவினர் வாஜ்பாயின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர்.

தற்போது வாஜ்பாயின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறதா ரிலையன்ஸ்? டிரம்ப் அனுமதிப்பாரா?

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

Show comments