எஸ்.எம்.எஸில் ரெயில் டிக்கெட் முன்பதிவு

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (11:07 IST)
செல்பேசியில் இருந்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். அனுப்பி ரெயில் பயணச் சீட்ட ு முன்பதிவு (ஐ-டிக்கெட்) செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கே டிக்கெட் அனுப்ப ி வைக்கப்படுகிறது.

இணைய தளம் மூலம் ரயில் பயணச் சீட்ட ு முன்பதிவு செய்யும் முறையை அடுத்து தற்போது செல ்பேசி எஸ்.எம்.எஸ். செய்து ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கடந்த சில வாரங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரிலையன்ஸ் செல்போன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த முறையில் ரெயில் பயணச ் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை பெறுவதற்கு விரும்புபவர்கள் இன்டர்நெட்டில் www.irctc.co.i n என்ற முகவரியில் செல்பேசி எண ் உள்ளிட்ட தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்துவிடவேண்டும். பதிவானபின் நமக்கு ரகசிய எண் ஒன்று கொடுக்கப்படும். அதன்பின்னர் எத்தனை முறைவேண்டுமானாலும் செல ்பேச ி மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது ரிலையன்ஸ் செல ்பேச ி மூலம ே ரயில் பயணச் சீட்ட ு முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகள் 48 மணி நேரத்தில் கொரியர் மூலம் டெல்லியில் இருந்து வீட்டிற்கே அனுப்பிவைக்கப்படும். இந்த சேவைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வ ிரைவில் அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments