Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்தம் : பா.ஜ.க. கோரிக்கைக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (20:17 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி விடுத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்க மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி மறுத்துவிட்டார்!

மாநிலங்களவை நடைமுறை விதி எண் 168ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மட்டுமின்றி, அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும் மாநிலங்களவைத் தலைவருக்கு தாக்கீது அளிக்கப்பட்டது.

அவைகளை ஏற்க முடியாது என்று மறுத்த அமீத் அன்சாரி, சர்வதேச அளவில் மத்திய அரசு செய்துகொள்ளும் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், அதனைக் கோரும் தீர்மானங்கள் அவை நடவடிக்கைக்கு உட்பட்டது ஆகாது என்று அமீத் அன்சாரி கூறினார்.

விதி எண் 168ன் கீழ் அளிக்கப்பட்ட தாக்கீதுகளை விதி எண் 176ன் கீழ் விவாதிப்பதற்கான தாக்கீதுகளாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அன்சாரி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments