Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒப்பந்தம் : விதி 184ன் கீழ் விவாதிக்க அனுமதி மறுப்பு!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (13:44 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தின் மீது மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தி விதி எண் 184ன் கீழ் விவாதம் நடத்த பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மறுத்துவிட்டார்!

123 ஒப்பந்தத்தின் மீது விவாதிக்கவும், விவாதங்களுக்கு பிரதமர் பதில் அளிக்கவும் கோரி விதி எண் 193ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்ற இடதுசாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அதற்கான அனுமதியை அளித்தார். விதி எண் 193ன் கீழ் வரும் திங்கட்கிழமை (அன்று பிரதமர் அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்பதைப் பொறுத்து) நடைபெறும் என்று கூறினார்.

மக்களவையில் இன்று முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும், விதி எண் 184ன் கீழ் கொண்டுவரப்படும் தீர்மானம், "அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு அனுமதி மறுப்பதாகவும், இப்பொழுதுள்ள நிலையிலேயே அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துவதாகவும் உள்ளது. அந்த உரிமை இந்த அவைக்கு இல்லை. அது, இப்பொழுதுள்ள நிலையில் அந்த ஒப்பந்தத்தையே இந்த அவை நிராகரிப்பதற்கு ஒப்பாகும்" என்று கூறிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "அது இந்திய அரசு ஏற்கனவே கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை மறுப்பதாக ஆகிறது. எனது கருத்துப்படி, அது இந்த அவையின் சட்டப்பூர்வமான அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல" என்று கூறி நிராகரித்தார்.

அவை விதி எண் 184ன் கீழ் தீர்மானம் நிறைவேற்றக் கோரிய தாக்கீதை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பா.ஜ.க. உறுப்பினர் சந்தோஷ் தாங்வார், சமாஜ்வாடி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் கொண்டு வந்தனர்.

அவை விதி எண் 193ன் கீழ் விவாதம் நடத்தும் கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குரு தாஸ் தாஸ் குப்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் ரூப்சந்த் பால், சமாஜ்வாடி கட்சியின் ராம்ஜிலால் சுமன் ஆகியோர் கொண்டு வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments