பிரதமருக்கு எதிர்ப்பு : மாநிலங்களவை நாளை வரை தள்ளிவைப்பு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (13:35 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் குறித்து விளக்கிய பிரதமர், அவைக்கு தவறான தகவலை அளித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மாநிலங்களவை நாளை வரை தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதுமே பாஜக, சமாஜ்வாடி, அஇஅதிமுக உறுப்பினர்கள் பிரதமரை கண்டித்து முழக்கமிட்டதன் காரணமாக 45 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு அவை கூடியபோது சமாஜ்வாடி, அஇஅதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி முழக்கமிட்டனர். அவர்களோடு பாஜக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர்.

உறுப்பினர்கள் அமைதி காக்க கூறி அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான மொஹம்மது அன்சாரி விடுத்த வேண்டுகோள்கள பலனளிக்கவில்லை.

இதையடுத்து அவை நடவடிக்கைகளை நாளை காலை வரை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. இந்திய விமானப்படை தகவல்..!

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

Show comments