Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒப்பந்தம் : பிரதமருக்கு சோனியா பாராட்டு!

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (13:36 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த 123 ஒப்பந்தம் அது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு பிரதமர் அளித்த உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்!

123 ஒப்பந்தம், ஆளும் கூட்டணிக்கும், ஆதரவு அளித்துவரும் இடதுசாரி கூட்டணிகளுக்கும் இடையே சிக்கலை உருவாக்கியுள்ள நிலையில், இன்று காலை நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்காக தான் பிரதமரைப் பாராட்டுவதாகவும் கூறினார்.

தொழில்நுட்ப தன்னிறைவு, நமது நாட்டின் இறையாண்மை ஆகியன முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அதற்கு ஆழமான விவாதமே தீர்வாக இருக்கும் என்று கூறிய சோனியா காந்தி, இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவிற்கு கிடைக்கும் பலன்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுமாறு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சோனியா கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments