மக்களவையில் அமளி, தள்ளிவைப்பு!

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (13:27 IST)
தென்மேற்கு ரயில்வே எனும் புதிய ரயில் கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்றுகோரி கேரளத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்படுத்திய அமளியால் மக்களவை நடவடிக்கைகள் அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது!

ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாதது ஏன் என்று கோரி கேரள உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். சிலர் கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளைக் காட்டினர்.

அவர்களுடைய பிரச்சனையை கேள்வி நேரத்திற்குப் பிறகு எழுப்பலாம் என்று அவை முன்னவர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் அரை மணி நேரத்திற்கு தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments