சஞ்சய் தத் பிணைய மனு : மபுகவிற்கு தாக்கீது

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:04 IST)
மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று தீர்ப்பாகி சிறைச்சாலையில் உள்ள சஞ்சய் தத் தாக்கல் செய்துள்ள பிணைய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பிணைய மனு மீதான அவசர விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் மனு மீது விளக்கம் அளிக்க முன் வந்தார்.

ஆனால், "தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் 20ஆம் தேதி விசாரிப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துவிட்டார்.

சீரான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் நீதிபதி கூறினார்.

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாகக் கூறி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments