அணுசக்தி ஒப்பந்தம் : நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (18:49 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைபை நடைமுறைக்கு கொண்டு வரும் 123 ஒப்பந்த வரைவை, முக்கிய எதிர் கட்சியான பாஜக வும், ஆளும் கூட்டணிக்கு அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடது சாரிகளும் நிராகரித்து விட்ட நிலையில் நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வரும் 123 வரைவை இடது சாரிகள் நிராகரித்து விட்டது. அதேபோல், முக்கிய எதிர்கட்சியான பாஜக 123 ஒப்பந்த வரைவு தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றியிருப்பதால், 123 ஒப்பந்த வரைவை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்ட வட்டமாக மறுத்து விட்டார். ஆனாலும் இக்கூட்டத்தொடரில் வருகிற 13 ஆம் தேதி 123 ஒப்பந்தம் வரைவு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிகால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எதிர் கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை குடைந்தால் இதுதான் நடக்கும்!.. நாஞ்சில் சம்பத் ராக்ஸ்!...

நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...

உனக்கெல்லாம் மன்னிப்பே இல்ல.. வெட்கமா இல்லயா?!.. சிறைவாசலில் இளைஞர்கள் ஆத்திரம்...

2026 தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி!.. பிரவீன் சக்ரவர்த்தி டிவிட்!...

தவெகவுக்கு விசில் சின்னம்!.. விசில் சின்னமும்... சில தகவல்களும்!..

Show comments