தமிழக ஆறுகளை பாதுகாக்க: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (10:59 IST)
தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காவிரி, வைகை, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ. 4,783 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் சுமார் 160 நகரங்கள் வழியாக பாயும் 34 ஆறுகளை பாதுகாக்க தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இத்திட்டதின்படி, தற்போது சென்னையில் உள்ள கூவம், திருச்சியில் உள்ள காவிரி, மதுரையில் உள்ள வைகை, நெல்லையில் உள்ள தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ 4,783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுத்துச் சுத்தப்படுத்தி அதை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சென்னை அடையாறு கூவம் ஆற்றை பாதுகாக்க ரூ.491 கோடியும், காவிரி ஆற்றுக்கு ரூ. 3008 கோடியும், மதுரை வைகை ஆற்றை பாதுகாக்க ரூ.165 கோடியும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க ரூ. 66 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments