Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை ரயில் குண்டு வெடிப்பு : 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை!

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (15:31 IST)
2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மும்பை புறநகர் மின் தொடர் வண்டிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 13 பேர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்களில் ஜூலை 11 மாலை 6.24 மணி முதல் 6.35 மணி வரையிலான 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 7 ரயில்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. இதில் 187 பயணிகள் கொல்லப்பட்டனர். 800க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

இத்தாக்குதல் தொடர்பாக கமால் அன்சாரி, டாக்டர் தன்வீர் அன்சாரி, ·பைசல் ஷேக், எட்டேஷ்ஷாம் சித்திக், மொஹம்மது மஜீத் ச ா ஃபி, மொஹம்மது அலி அஸ்லாம் ஷேக், மொஹம்மது ஷாஜித், அப்துல் வாகித்யுத்தீன், முஸாமில் ஷேக், ஷோஹைல் ஷேக், ஜமீர் ஷேக், நவீத் ஹ ூசேன், அஸ ி ·ப் கான் பஷீர் கான் ஆகியோர் மீது மகாராஷ்ட்ர மாநில திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3 ( II), 3 (2), 3 (4), 3 (5), இந்திய தண்டனைவியல் சட்டம் 120 பி (சதித் திட்டம் தீட்டுதல்), 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 121 (எ), 122, 123, 124 ஆகியவற்றின் கீழும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13 எ (2), 17, 40, வடிபொருட்கள் சட்டப் பிரிவுகள் 5, 6, 9 பி, ரயில்வே சட்டம் 159, 153, கடவுச் சீட்டுச் சட்டம் 12 (1) (சி), சொத்துக்களை சேதப்படுத்துவது தடுப்புச் சட்டம் 3 (4) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட மகாராஷ்ட்ர மாநில திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மிருதுலா பக்தார், குற்றம் சாற்றப்பட்டவர்கள் தங்களுடைய வழக்கறிஞர்களுடன் விவாதித்து பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இவ்வழக்கை நீதிபதி மிருதுலா பக்தார் விசாரிக்கக் கூடாது, அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி குற்றம் சாற்றப்பட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை முதன்மை நீதிபதி அசோக் பங்காலேயிடம் நீதிபதி பக்தார் அனுப்பி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments