அல்-கய்தா மிரட்டலை சந்திக்க தயார் : மத்திய அரசு

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:28 IST)
அல் - கய்தா தீவிரவாதிகளின் மிரட்டலை சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா மிரட்டல் விடுத்திருந்தது. இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியான வீடியோ கேசட்டில் தோன்றிய ஆடம் கடான், டெல் அவிவ், மாஸ்கோ மற்றும் டெல்லி ஆகிய நகரங்களை தாக்குவது தங்களது அடுத்த கட்ட இலக்கு என்று கூறியுள்ளான்.

காஷ்மீர் மாநிலத்தில் அமெரிக்காவில் உதவியோடு 1,00,000 முஸ்லிம்களை இந்தியா கொன்று குவித்துள்ளது என்று தெரிவித்தான். அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை அபகரிக்க அமெரிக்க நினைப்பதாகவும் ஆடம் கடான் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில ், அல் கொய்தாவின ் எந்தவித மிரட்டலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தயாராக உள்ளதாகவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

மிரட்டல் தொடர்பாக இதுவரை எந்தவித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

Show comments