காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு : 12 பேர் காயம்!

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (15:01 IST)
ஸ்ரீநகர்-ஜம்மு தேச நெடுஞ்சாலையில் மக்கள் கூடியிருந்த இடத்தில் பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு விழுந்து வெடித்ததில் 12 பேர் காயமடைந்தனர்!

ஸ்ரீநகர் - ஜம்மு தேச நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள அவந்திபுரா எனுமிடத்தில் மக்கள் அதிகம் திரண்டிருந்த இடத்தில் பயங்கரவாதிகள் இந்த கையெறி குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 12 பேர் காயமுற்றனர் என்றும், இதில் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

காயமடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தோடா மாவட்டம் புலந்த்போரா என்ற இடத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிறப்பு காவல் அதிகாரி ராஜிந்தர் குமார் என்பவர் உயிரிழந்தார் என்று காவல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா போட்ட ஆர்டர்!.. ஆடிப்போன பழனிச்சாமி!.. டெல்லியில் நடந்தது என்ன?....

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

Show comments