27 விழுக்காடு இடஒதுக்கீடு : பாலகிருஷ்ணன் தலைமையில் அமர்வு அமைப்பு

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (11:07 IST)
மத்திய அரசுக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணை வருகிற 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தது. தற்போது, இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள ஐந்து நீதிபதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் அர்சித் பசாயத், தன்வீர் பண்டாரி, இரவீந்திரன், தாக்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் நீதிபதி அர்சித் பசாயத் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தவர் என்பதும், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது.

நீதிபதி பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ள இடைக்கால தடை இன்னமும் அமலில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சிலிண்டருக்கு ரூ.968 உயர்வு.. வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.3237..! வீட்டு சிலிண்டர் விலை என்ன?

ஸ்டாண்டர்ட் சார்ட்டர் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்..!

பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம்..!

பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம் இருப்பது உண்மையா?!.. ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு..

Show comments