குர்மீத் ராம் சிங் மீது மூன்று வழக்குகள்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2007 (15:06 IST)
தேரா சச்சா சவுதா மதத் தலைவர் பாபா குர்மீத் ராம் சிங் மீது மத்திய புலனாய்வுக் கழகம் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், பத்திரிக்கையாளர் ராம் சந்தர் ஆகியோரது கொலை வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்கு ஒன்றிலும் தேரா சச்சா சவுதா மதத் தலைவர் பாபா குர்மீத் சிங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய புலனாய்வு கழக வழக்கறிஞர் ராஜன் குப்தா தெரிவித்தார்.

இரண்டு கொலை வழக்கில் மேலும் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக குர்மீத் ராம் சிங்கிற்கு அம்பாலா நீதிமன்றம் தாக்கீது அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, குர்மீத் ராம் சிங் மீதான வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிபதிகள் அதேஷ் குமார், அஜய் லம்பா ஆகியோர் முன்னையில் தாக்கல் செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments