ஜார்கண்டில் மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூடு 12 பேர் படுகாயம்

Webdunia
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை பேருந்து மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 28 ஆம் தேதி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தை மாவோயிஸ்ட் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் பாகுவ காடி என்ற இடத்திற்கு அகே வந்து கொண்டிந்த பேருந்து மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதில், பேருந்தில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படுகாயம் அடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு விஷப்பாம்பு.. மல்லிகார்ஜுன கார்கே கருத்து.. அமித்ஷா கொடுத்த பதிலடி..!

அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் Rice Beer.. en Z மத்தியில் பிரபலமாகி வருவதால் பரபரப்பு..!

இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

Show comments