Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தின் புதிய தளபதி தீபக் கபூர்!

Webdunia
வியாழன், 26 ஜூலை 2007 (20:11 IST)
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக தற்பொழுது துணைத் தலைமைத் தளபதியாக உள்ள ல ெ ஃப்டினண்ட் ஜென்ரல் தீபக் கபூர் பொறுப்பேற்கவுள்ளார்!

இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தற்பொழுது இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக உள்ள ஜென்ரல் ஜே.ஜே. சிங் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

1948 ஆம் ஆண்டு பிறந்த ல ெ ஃப்டினண்ட் ஜென்ரல் தீபக் கபூர், தனது 19வது வயதில் இந்திய ராணுவத்தின் பீரங்கிப் பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து தகுதி பெற்ற தீபக் கபூர், 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் வங்கதேச போர் முனையில் முக்கியப் பங்காற்றியவர்.

1994-95 ல் சோமாலியா நாட்டின் ஐ.நா. அமைதிப் படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்.

ஜம்மு-காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படைப் பிரிவின் கட்டளைத் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதற்காக அவருக்கு சேனா பதக்கம் 1998ல் வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments