Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் : நஜ்மா ஹெப்துல்லா

Webdunia
திங்கள், 23 ஜூலை 2007 (09:47 IST)
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தல ைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ரசீது மசூத் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ு, அவர் சார்பில் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டண ி, இடது சாரிகள் சார்பில் பொது வேட்பாளராக தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் முகமது அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அன்சாரியின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறன.

இதனிடையே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் நேற்று மாலை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments