Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதீபா வெற்றி

Webdunia
சனி, 21 ஜூலை 2007 (18:07 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி , இடது ச ார ிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மூன்று லட் சத்திற்கும் அதிகமா ன வ ாக ்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 24 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.

ஆங்கில எழுத்து வரிசையின்படி மாநில வாரியாக பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. அதன்படி ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 223 பேரவை உறுப்பினர்களின் முதல் வாக்குகளை பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அசாம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 92 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளையும், ஷெகாவத் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளனர். 3 வது அணியில் இடம் பெற்றுள்ள அசாம் கன பரிஷத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 58 உறுப்பினர்கள் வாக்குகள ் பிடதீபா பாட்டீலுக்கும், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் வாக்க ு ஷெகாவத்திற்கும் கிடைத்துள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 8 ஆகும்.

டெல்லியில் பதிவான வாக்குகளில் பிரதீபா 50 வாக்குகளையும், ஷெகாவத் 19 வாக்குகளையும் பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு 58 ஆகும். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் வேட்பாளர் பிரதீபா முன்னிலை வகித்து வந்தார்.

அனைத்து மாநில வாக்குகளும் எண்ணப்பட்டத்தில் பிரதீபா பாட்டீல், ஷெகாவத்தை விட மூன்று லட் சத்திற்கும் அதிகமா ன வ ாக ்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 24 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments