Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதீபா பாட்டீல் முன்னிலை

Webdunia
சனி, 21 ஜூலை 2007 (12:43 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஐ.மு. -இடதுசாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் துவக்கத்திலேயே முன்னிலைக்கு வந்துள்ளார்.

ஆங்கில எழுத்து வரிசையின்படி மாநில வாரியாக பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. அதன்படி ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 223 பேரவை உறுப்பினர்களின் முதல் வாக்குகளை பெற்றுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆந்திரத்தில் முக்கிய எதிர்கட்சியான தெலுங்கு தேசம ், தேர்தலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு 148 ஆகும். அதன்படி பிரதீபா பாட்டீல் 3304 வாக்குகளும ், ஷெகாவத் 296 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments