Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனீஃப் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் : பிரதமர்!

Webdunia
புதன், 18 ஜூலை 2007 (19:36 IST)
இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு சட்ட வரையறைக்கு உட்பட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஆஸ்ட்ரேலிய அரசிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தனது செல்பேசியின் சிம் கார்டை அளித்து உதவியதாக இந்திய மருத்துவர் ஹனீஃப்பை ஆஸ்ட்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது, பணி விசா ரத்து செய்யப்பட்டு தற்பொழுது மீண்டும் கைதியாக உள்ளார். பிணைய விடுதலை அளித்த பின்னரும், தன்னை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும், விசாவை குடியேற்றத்துறை ரத்து செய்ததை நிராகரிக்குமாறு கோரியும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஹனீஃப் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஹனீஃப் விவகாரம் தொடர்பாக ஆஸ்ட்ரேலியாவிற்கான இந்திய தூதரக அதிகாரி, வெளியுறவுத் துறை அலுவலகம் ஆகியவை ஆஸ்ட்ரேலிய அரசுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

பிணைய விடுதலை அளித்த பின்னரும் ஹனீப்பை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது இந்தியாவிற்கு வருத்தம் அளிக்கக் கூடிய செயலாக உள்ளது என்று ஆஸ்ட்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

சிறையில் உள்ள இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு சட்ட வரையறைக்கு உட்பட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments