Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் விபத்து: 12 பேர் பலி 36 பேர் படுகாயம்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (12:48 IST)
மத்திய பிரதேசத்தில் பேருந்தும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 40 பேரை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சல்கன்பூரில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டர் கோதா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 36 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்திற்குள்ளான பேருந்து மஹாராஷ்டிர மாநிலம் கொண்டியாவிலிருந்து போபால் நோக்கி வந்து கொண்டிருந்தது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இடார்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருப்பதாகவ ும ், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள் ளதாகவும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments