Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை புறக்கணிப்பதா? 3 வது அணி மீது பாஜக புகார்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (10:50 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 3 வது அணி அறிவித்துள்ளது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு கொடுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர் கட்சித் தலைவர் அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் எந்த இடமும் அளிக்கப்பவில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்தலை புறக்கணித்தால் அது மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியாமல் போய் விடும் என்றும் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருப் பதாக கூறிய அத்வானி, இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments