Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாமிற்கு சார்லஸ்-II விருது!

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (15:05 IST)
இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்திற்காக பெரும் பங்கு அளித்தார் என்று கூறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பிரிட்டனின் மிக உயரிய விருதான இரண்டாவது சார்லஸ் அரசர் பதக்கத்திற்காக தேர்வு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு சமூகம் அறிவித்துள்ளது!

ஜப்பானின் பேரரசர் அக்கி ஹிட்டோவிற்குப் பிறகு இந்த உயர்ந்த விருது அளிக்கப்படும் பிரிட்டனைச் சேராத 2வது நபர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நம் நாட்டை வளர்ந்து நாடு என்ற நிலையில் வளர்ந்த நாடு என்பதற்கான பாதையை உருவாக்கி மாற்றத்தைக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆற்றியவர் என்று ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.

விஞ்ஞானியாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அப்துல் கலாம் பெரும் பங்கு அளித்துள்ளார் என்று ரீஸ் கூறியுள்ளார்.

கிங் சார்லஸ்- II மெடல் என்றழைக்கப்படும் இரண்டாம் சார்லஸ் பதக்கத்தை வழங்கும் விழா ஒரே நேரத்தில் டெல்லியிலும், லண்டனிலும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவினால் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா பிறகு அறிவிக்கப்படும் என்று ராயல் சொசைட்டி கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments