Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தியின் பேரன் இறந்து கிடந்தார்!

Webdunia
புதன், 13 ஜூன் 2007 (18:13 IST)
மகாத்மா காந்தியின் பேரனும், தத்துவ எழுத்தாளருமான ராமச்சந்திர காந்தி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் இறந்து கிடந்தார்!

காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியின் மகனான இவர், இந்தியா சர்வதேச மையத்தில் தான் தங்கியிருந்த 15வது எண் அறையில் இன்று காலை இறந்து கிடந்ததாகவும், அங்கு பணியாற்றிடும் ஊழியர்கள் இதனைக் கண்டு தன்னிடம் கூறியதாகவும் அம்மையத்தின் செயலர் வேணுகோபால் கூறியுள்ளார்.

அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தனது மூத்த சகோதரரின் மரணம் குறித்த செய்தி கிடைத்ததும் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி டெல்லிக்கு விரைந்துள்ளதாக ராஜ்பவன் செய்திகள் கூறுகின்றன. (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments